நொச்சி இலைக்கு இத்தனை பயன்களா...

நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை, கால்நடைகள் அண்டாது.

நொச்சி இலையை காய்ச்சி, ஆவி பிடித்தால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி தீரும், சைனஸ் கோளாறுகள் சரியாகும்.

மிளகு, பூண்டு உடன் சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைகளைத் தேய்த்து வந்தால், அவை மறையும்.

காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை.

ஒரு தேக்கரண்டி, நொச்சி இலை சாறில், ஒரு கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும். மேலும் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன.