பாத்ரூமுக்கு செல்போன் எடுத்துட்டு போவீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான் !
இன்றைய பரபரப்பான உலகில், ஒருசிலர் பாத்ரூமுக்கு செல்லும்போது கூட, செல்போன் எடுத்துச்செல்ல தவறுவதில்லை. வெஸ்டர்ன் டாய்லட்கள் இதற்கு அதிக வசதியாக உள்ளன.
அப்போது பாத்ரூமுக்குள் உள்ள கிருமிகள் செல்போனில் படிய வாய்ப்புள்ளன. டாய்லட்டில் ஃபிளஷ் செய்யும் போது, அந்த தண்ணீர் செல்போன் மீது படலாம்.
ஆனால், தொடர்ந்து போனை சுத்தப்படுத்தாமல் அப்படியே பயன்படுத்துகிறோம். இதனால், அந்த கிருமிகள் வயிற்றுக்குள் செல்கிறது.
பாத்ரூமுக்குள் பயன்படுத்தும் செல்போன்களில் 92 சதவிகிதம் ஈ கோலி, சால்மொனெல்லா போன்ற ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஈ கோலி பாக்டீரியா என்பது மலத்திலுள்ள ஒரு கிருமியாகும். உலகளவில் இந்த கிருமியினால் லட்சக்கணக்கானவர்கள் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
பாத்ரூமில் செல்போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்தும்போது, காதுகள், பெருங்குடல் அடிவாய் மீது அழுத்தம் உண்டாகிறது.
இதனால் மூல நோய், வாய்வு தொல்லை, பெருங்குடல் அடிவாய் பகுதியிலுள்ள ரத்த நாளங்களில் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மேலும், பெரும்பாலான செல்போன்கள் வாட்டர் ப்ரூஃப் ஆக இல்லாததால், கீழே விழுந்தோ அல்லது தண்ணீர் பட்டோ சேதமடையக் கூடும்.