சாப்பிட்ட உடனே இவற்றை செய்வதை தவிர்க்கலாம்…
உணவுக்கு பிறகு நீச்சல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என சில செயல்களும் உங்கள் நலத்திற்கு கேடானது. வேறு என்னென்ன...இதோ ஒரு பார்வை!
சாப்பிட்டவுடன் புகை பிடிப்பது மிகவும் ஆபத்தானது. செரிமான செயல்முறையின் போது, நிக்கோடின் ரத்தத்திலிருக்கும் ஆக்சிஜனுடன் பிணைக்கப்பட்டு எளிதில் உறிஞ்சப்படுகிறது.
சாப்பிட்ட பின்பு துாங்குவதால், வயிற்றில் உருவாகும் செரிமான சாறுகள் எதிர் திசையில் பயணித்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முழு செரிமான செயல்முறையும் பாதிக்கும்.
உணவுக்கு பின் குட்டி துாக்கத்தை பெரும்பாலானோர் விரும்புவார்கள். ஆனால் கண்டிப்பாக சாப்பிட்டு இரண்டு - மூன்று மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும்.
குளிப்பதால், ரத்தம் உடல் முழுவதும் பாயும். இது, உங்கள் செரிமானத்தை தாமதப்படுத்தும். சாப்பிட்டு, 45 நிமிடம் காத்திருந்து பின்னர் குளிக்கலாம்.
பழங்களை வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, சாப்பிடுவதுதான் சிறந்தது. சாப்பிட்ட உடனே பழங்களை எடுத்துக்கொள்வது, சரியாக செரிமானம் ஆகாமல் போகலாம்.
சிலருக்கு உணவுக்கு பிறகு டீ குடித்தால்தான், சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். ஆனால், நீங்கள் அருந்தும் டீ, உடல் உணவிலிருந்து புரதம், இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கும்.
தேயிலை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம், செரிமானத்தை கடினமாக்கும். ஆகவே, உணவுக்கு முன்பும், பின்பும் குறைந்தது ஒரு மணிநேரம் டீ, காபி அருந்தாமல் இருப்பது நல்லது.