செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி பாயாசம்

தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - 1 கப், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - 2 சிட்டிகை

பனை வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - 3/4 கப், நெய் - 3 ஸ்பூன், முந்திரி, பாதாம் - தேவையான அளவு

கருப்பு கவுனி அரிசியை 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைத்து, தண்ணீரை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசியை 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

பின், வேகவைத்த அரிசியை வேறொரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக மசித்து, அதனுடன் பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

அடுப்பில் மிதமான தணலில் பாயாசம் பதம் வரும் அளவிற்கு ஒரு சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு தணலை அணைக்கவும்.

இறுதியாக, பொடிப்பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பைத் தூவி பரிமாறினால் சுவையான செட்டிநாடு கருப்பு கவுனி பாயாசம் ரெடி.