பூசணி விதையில் ஒளிந்திருக்கும் நன்மைகள் அறிவோமா!

பூசணி விதைகளில் இரும்புச்சத்து, வைட்டமின் இ, நார்ச்சத்து, புரதம் , மாங்கனீஸ், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் உள்ளன.

மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி அளவில் துத்தநாகம் உள்ளது. இது நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இதில் உள்ள ஒமேகா-3 அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். மேலும் நீரிழிவு பாதிப்பு வராமல் தடுக்கும்.

இவற்றில் உள்ள டிரிப்தோபான் என்னும் அமினோ அமிலங்கள் நல்ல உறக்கத்தைத் தரும்.

இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உகந்தது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோ போரோசிசைத் தடுக்க உதவும்.

சருமத்தை மென்மையாகவும், சுறுக்கமில்லாததாகவும் மாற்றும். கூந்தல் வலுவடையும்.

இதில் உள்ள கரோட்டினாய்டுகள் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவும். இரைப்பை, மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.