தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், காய்ச்சல் இருந்தால்...!
சாதாரணமாக பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் இருமல், காய்ச்சல் போன்றவை 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும்.
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ தொடர் இருமல் காய்ச்சல் இருந்தால் சளியை எடுத்து டிபி டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல் உள்ள நிலையில் வீட்டிலேயே கை வைத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தொடர் இருமல், சளி, மாலை நேரத்தில் காய்ச்சல், உடல் மெலிவது ஆகியவை டி.பி.யின் அறிகுறிகளாகும்.
சளி பரிசோதனை செய்தால் தான் எந்த மாதிரியான பாதிப்பு என்பது தெரியவரும்.
தற்போது நவீன முறையிலான டெஸ்ட் கருவி வந்துள்ளது. இதனால், டிபி பாதிப்பு உள்ளதா என்பதை உடனடியாக அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.