கொழுப்பை கரைக்க உதவும் 9 இயற்கை உணவுகள்..!

நார்ச்சத்து நிறைந்த பசலைக்கீரையை எடுத்து கொள்வது பசியை குறைப்பதோடு, திருப்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் தனிம, ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ், உடல் செல்கள் சீராக செயல்பட உதவும்.

பூண்டு... தெர்மோஜெனிசிஸை தூண்ட உதவுவதோடு, கொழுப்பு செல்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுகிறது.

நட்ஸ் வகைகளில் தெர்மோஜெனிக் விளைவுகள் இருப்பதும், எண்ணற்ற வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. உடல் நச்சுக்களை நீக்க உதவுவதுடன், திருப்தி அளவை அதிகரிக்கிறது.

வைட்டமின்கள், புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவான முட்டையை எடுத்து கொண்டால், உடல் எடையை குறைக்க தூண்டுவதில் முக்கியபங்காற்றுகிறது.

ஆரஞ்சு பழத்திலுள்ள 'ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட்', உடலில் தேங்கும் சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. தினசரி உணவில் சேர்த்து கொண்டால், உடல் எடை குறைய துவங்கும்.

மீன் வகைகள்... சாலமன், டீனா போன்ற மீன்களில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. வீக்கத்தை குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பில் உள்ள டிரைகிளிசரைடுகள் அளவை குறைக்க உதவுகிறது.

தக்காளியில் லைகோபின் இருப்பதால், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலின் எடையை குறைப்பதோடு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

ப்ரோக்கோலி... வைட்டமின்கள் ஏ. சி, கே நிறைந்த ப்ரோக்கோலி, கெட்ட கொழுப்புகளை குறைக்க மட்டுமின்றி, உடலில் இருந்து நச்சு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.