கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தத்தால் உண்டாகும் பாதிப்புகள் இவை

கர்ப்ப காலத்தில் ஒருசிலருக்கு தலை வலி, பார்வை மங்குதல் மற்றும் வாந்தி போன்றவை தொடர்ச்சியாக இருக்கக்கூடும்.

கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கர்ப்ப காலத்தில் தலைவலி, பார்வை மங்குதல், மேல் வயிற்றில் வலி, வாந்தி போன்ற பிரச்னைகள் இருந்தால் உரிய சிகிச்சை பெற வேண்டும்.

பெரும்பாலான கர்ப்பிணிகள் மிகவும் அசட்டையாக இருக்கும்போது, இறுதி நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு குழந்தை, தாய் இருவருக்கும் பிரச்னைகளை ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்பிணியாக இருக்கும் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டால் கண், இதயம், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தால் சிறுநீர் மிக, மிகக் குறைவாக செல்லும். எனவே, அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் பாதிப்பிலிருந்து கர்ப்பிணிகள் விடுபட முடியும். இல்லாவிட்டால் வலிப்பால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.