நாள்பட்ட அழற்சியை போக்க இதோ டிப்ஸ்..!

நாள்பட்ட அழற்சி என்பது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டப்படும் போது ஏற்படும் நிலை. இது பல அடிப்படை காரணங்களால் இருக்கலாம்.

நாள்பட்ட அழற்சியானது மெதுவான, நீண்ட கால அழற்சி என்றும் குறிப்பிடப்படுகிறது, இது பல மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடிக்கும். நாள்பட்ட அழற்சிக்கு தீர்வு காண, முதலில் காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு உணவை சாப்பிடுவது நாள்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.

சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நாள்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளையும் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலைத் தளர்த்தவும் உதவுகிறது, இது அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் மற்றும் வீக்கத்தை துரிதப்படுத்தக்கூடும். எனவே, முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.