முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாமா?
முட்டையில் கால்சியம், புரதம், லுாட்டின், சியாசாந்தைன் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா, வைட்டமின் ஏ, டி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
முட்டையை தொடர்ந்து சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கக்கூடும். இதயம், கண், மூளை ஆரோக்கியத்தை மேம்படுகிறது; உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
தினமும் முட்டையை குறிப்பாக அதன் மஞ்சள் கரு உட்பட சாப்பிடுவதால் கொழுப்பு அதிகம் சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதயக் கோளாறை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
ஆனால், தினம் 1 முட்டை அல்லது வாரத்திற்கு 5 முட்டை சாப்பிடுவதால், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை சார்பில் நடந்த ஆய்வின் படி, தினமும் 1 அல்லது 2 அவித்த முட்டைகளை சாப்பிடுவதால், கொழுப்பு எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை.
மஞ்சள் கருவிலுள்ள பாந்தோதெனிக் அமிலம் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்ற உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமம், கூந்தல், நகங்களை பராமரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் தான் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.