மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

வாழைப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம் என பல சத்துகள் உள்ளன. மழை நேரம் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

ஆனால் , வாழைக்கும் மழைக்கும் எந்த தொடர்பும் இல்லை என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தபோதும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாழையை தவிர்க்கலாம்.

மேலும் வெறும் வயிற்றில் அல்லது , வாழைப் பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிட செரிமான பிரச்னையை உண்டாக்கலாம்.

அதேபோல் இதில் பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

செரிமானக் கோளாறு, இருமல், சளி பிரச்னை இருக்கும் சமயத்தில் வாழையை தவிர்க்கலாம். குறிப்பாக இரவில் இதை சாப்பிடக் கூடாது.

பொதுவாகவே பால் கூட சளியை அதிகப்படுத்தும். அதனால் வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

மழைக்காலத்தில் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மாலை 4 மணிவாக்கில் சாப்பிடலாம். இரவு உணவுக்கு பின் ஒன்றரை மணி நேரம் கழித்து பழம் உண்ணலாம்.

வாழை பழங்கள் சாப்பிடுவதால் குளிர்ச்சி உண்டாகாது. ஆனால், வாழையை குளிரவைத்தோ, ஐஸ்க்ரீம் உடன் கூடிய ஃப்ரூட் சாலட்டாக சாப்பிடக் கூடாது.