சளியை நீக்கும் சுவையான கற்பூரவல்லி பஜ்ஜி!

சளியை போக்க கற்பூரவள்ளியை கசாயம் வைத்தும். ரசம் வைத்தும் எடுத்துக்கொள்வோம். இந்த மழைக்காலத்திற்கு ஏற்றவாறு அதன் இலை வைத்து பஜ்ஜி செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

தேவையானப் பொருட்கள்: கற்பூரவல்லி இலை - 15, கடலை மாவு - 2 கப், மிளகாய்த்துாள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: கடலை மாவுடன் உப்பு, மிளகாய்த்துாள், தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில், எண்ணெய் ஊற்றி, நன்றாக காயவிடவும். ஒரே அளவுள்ள கற்பூரவல்லி இலைகளை, பஜ்ஜி மாவில் தோய்த்து, கொதிக்கும் எண்ணெயில் போடவும்.

திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். கற்பூரவல்லி பஜ்ஜி தயார்.

தொட்டுக் கொள்ள சட்னி ஏற்றது. சூடாக சாப்பிட்டால், 'மொறு... மொறு...' என, சுவையாக இருக்கும்.

சளியை போக்கும் இந்த பஜ்ஜி உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள், பெரியோர் என, அனைவரும் விரும்பி உண்பர்.