குட்டீஸ்களின் பேவரைட் ஸ்வீட் கார்ன்...!
ஸ்வீட் கார்ன் (Sweet corn) கொஞ்சம் இனிப்பு சுவையுடன் எளிதாக உண்ண முடியும் என்பதால் பலருக்கும் பிடிக்கும்.
அதுவும் குழந்தைகளுக்கு இது மிகவும் பேவரைட். எந்த மால் போனாலும் இவற்றை வாங்காமல் குழந்தைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள்.
இதில் அதிகளவு நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்றவை உள்ளன.
இந்த ஸ்வீட் கார்ன் கொண்டு பல விதமான ஸ்னாக்ஸ் ரெசிபி செய்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.
வேகவைத்து, எண்ணெயில் பொரித்த கார்னை மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், எலுமிச்சை, மற்றும் உப்பை தேவையானளவு நன்கு கலக்கினால் பொரித்த மசாலா கார்ன் தயார்.
கார்ன் கட்லெட்... வேகவைத்து மசித்த உருளை, கார்ன் உடன் வெங்காயம், கொத்தமல்லி, சீஸ், பிரட்தூள், மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா, கரம் மசாலா, உப்பை சேர்த்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வேகவைத்த கார்ன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் இவற்றுடன் சிறிது புதினா சட்னி, புளிச்சட்னி, சேவ், பொரி, சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறினால் டேஸ்டியான கார்ன் பேல் ரெடி.