புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதிலிருந்து முழுமையாகக் குணமடையலாம். உடலில் உள்ள உறுப்புகளில் எங்கே வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.
புற்றுநோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து கொண்டே வரும். இது அனைத்து வகையான புற்றுநோய்க்கும் பொருந்தும்.
உடல் எடை திடீரென்று குறைந்தால் அது குறித்து விழிப்புணர்வு தேவை. எவ்வளவு விருப்பமான உணவைக் கொடுத்தாலும் அதை உண்ண விருப்பம் இருக்காது.
உடலில் உள்ள தோல்கள் வெளுத்து வறட்சியாகக் காணப்படும். ரத்தசோகை வந்தவரைப் போல அறிகுறி தென்படும். ரத்த ஓட்டம் இருக்காது. 20 வயது இளைஞர் 50 வயது முதியவர் போல் காட்சி தருவார்.
எந்த உறுப்பில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதோ அதற்கு ஏற்ப உடல் பிரச்னைகள் உருவாகும். நுரையீரல் என்றால் ரத்தவாந்தி, மூச்சு விடமுடியாமல் தவிப்பது, தொடர்ச்சியாக இருமல் என வரும்.
அதே கிட்னி புற்று எனில் சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். சிறுநீர் சரியாக வராமல் இருக்கலாம். ஆகவே எந்த உறுப்பாக இருந்தாலும் அதில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக கண்டறிய வேண்டும்.
முதல்நிலை உள்ள புற்றுநோய் என்பது பெரிய அளவில் அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கும். அதனால் பலர் அலட்சியமாக இருந்து விடுவர்.
எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவருக்கும் புற்றுநோய் வரக்கூடும். அதற்கு மரபணு சார்ந்த பிரச்னைகள் முக்கிய காரணம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.