யாருக்கு கால் இழப்பு ஏற்படும்?
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கால் பாதிப்பை 5 - 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம்.
இந்தியாவில் விபத்தினால் கால்களை இழப்பவர்களை தவிர கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால் கால் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கால் எரிச்சல், மதமதப்பு, பஞ்சு மேல் நடப்பது அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு, கணுக்கால் வலி, ஆறாத புண்கள், வீக்கம், கொப்பளங்கள் ஆகியவை கால் பாதிப்பின் அறிகுறிகள்.
காலில் தோல் அல்லது நகம் நிறம் மாற்றம், தோல் மினுமினுப்பு, முடி உதிர்தல், கால் ஆணி, ஆங்காங்கே குழி விழுதல், கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்வது ஆகியனவும் அறிகுறிகள்.
மேலும் கால் வெடிப்பு, விரல் இடுக்குகளில் புண், விரல்கள் உருமாறுதல், விரலுக்கு அடியில் தோல் தடிமன் குதிங்கால் வலி, காலை தாங்கி எழுந்த பின் தரையில் ஊன்ற முடியாமல் வலி இருக்கும்.
அதிக எடை உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய், ரத்த கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாதவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
கால் பாதிப்பு உள்ளவர்கள் பாத அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.