மூட்டுவலிக்கு வழிவகுக்கும் புரதச்சத்து குறைபாடு

தற்போதைய நாகரிக உலகில் பலரும் பதப்படுத்தப்பட்ட, சத்தில்லா உணவுகளுக்கே பலரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்

டயட்டில் போதியளவு புரதச்சத்து எடுக்காவிட்டால் இயற்கையாகவே உடலில் எலும்புகளில் இருந்து எடுத்துக்கொள்ளக்கூடும்.

குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் புரதச்சத்து போதியளவு இருப்பதில்லை. இதனால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து இடுப்பு மற்றும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர்.

எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இடுப்பு, மூட்டு வலி வந்தால் பெரும்பாலும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளதா என பரிசோதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் எடையை சென்டிமீட்டரில் கணக்கிட்டு, அதில் 100ஐ கழித்தால் வருவது நம் உடலுக்கு அவசியமான புரதம். உயரம் 150 செ.மீ., என்றால், தினமும் 50 கிராம் புரதம் தேவை.

இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அதிகளவில் உள்ளது. போதியளவு புரதத்தை எடுக்காவிட்டால் ஆரோக்கியக்குறைபாடு ஏற்படக்கூடும்.

பிராய்லர் சிக்கனில் கூட இச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. வாரமொருமுறை குறிப்பிட்டளவு உட்கொள்ளும்போது வீண்பாதிப்பை தவிர்க்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்பனேட்டட் பானங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது. இதை சாப்பிடுவதால் உடல் பருமன் மட்டுமே அதிகரிக்கும்.