குழந்தையின்மையை ஏற்படுத்துமா அயோடின் குறைபாடு?
நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, இறைச்சி, சில பழங்களில் உள்ள அயோடின், உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.
குழந்தைப்பேறுக்கு தயாராகும் தம்பதியினர் அந்த சமயத்தில் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாக, நாளொன்றுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் உடலில் சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் அயோடினின் தேவை சற்று அதிகமாக, அதாவது 220 - 290 மைக்ரோ கிராம் அளவு தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கரு முட்டைக்கு தேவையான அயோடின் கிடைக்காதபட்சத்தில் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக என சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது தவிர அனைவருக்கும் தைராய்டு ஹார்மோன் சேர்க்கை நடைபெற அயோடின் அடிப்படையான ஒன்று.
இது உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நடக்க, உடல் எடை சீராக இருக்க, கருமுட்டைகள் ஆரோக்கியமாக வளர்வது போன்ற பலவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.
அயோடின் குறைப்பாட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை சரிய வாய்ப்புள்ளது.
எனவே, அயோடின் உள்ள உப்பை பயன்படுத்துவது, பால், பாலாடைக்கட்டி, யோகர்ட், முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றை டயட்டில் சேர்ப்பதன் மூலம் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.