மூலிகையில் கீழாநெல்லி ஒரு கில்லி!

கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி, இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது.

இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். மேற்புறத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. கீழ் நோக்கிய காய்கள் கொண்டதை பயன்படுத்த வேண்டும்.

செடி முழுவதுமுள்ள தண்டு, வேர், மற்றும் இலைகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் பயனுடயது. இக்கீரையில் புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு உள்ளிட்ட நான்கு சுவைகளும் உண்டு.

மஞ்சள் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய், சிறுநீர் பெருக்கியாகவும், வீக்கம், கட்டி, உள்ளிட்டவைகளை கரைத்து நரம்பு சதையை சுருங்கச் செய்யும் மருந்தாக உள்ளது.

தீராத தலைவலி, கல்லீரல் பழுது, ரத்த சோகை இவைகளுக்கு அரிய மருந்தாக உள்ளது.

கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவி குளித்து வர சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. இதன் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி நீங்கும்.