மெட்டபாலிசம் அதிகரிக்க தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள்..!
மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் என்பது நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து ஆற்றல்களை பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது.
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை தானாக அதிகரிக்கும்.
தைராய்டு ஹார்மோன் உடலில் அதிகமாக சுரந்தால், அது மெட்டபாலிசத்தை குறைக்கும். எனவே தான், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் குண்டாக இருப்பர்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் குறித்து பார்ப்போம்...
அலுவலகத்தில் எப்போதும் உட்கார்ந்தவாறு வேலை செய்யும்போது, மெட்டோபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும். உங்கள் உடலில் உள்ள கொழுப்பு, சர்க்கரை கரைவதை சிக்கலாக்கக்கூடும்.
அதிகளவில் மன அழுத்தத்தை தலையில் ஏற்றி கொள்வது, உடலை அழுத்தக்கூடும். இது தற்காலிகமாக உடல் உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்தலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும்.
குறைவான உணவு... உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் பட்டினி கிடப்பது, உணவு எடுத்து கொள்வதை குறைப்பது, மெட்டபாலிச விகிதத்தை குறைக்கும்.
அதிக உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலை கேட்டபோலிக் நிலைக்கு கொண்டு செல்லும்; தசைப்பகுதி குறைவது வலிமை குறையும். உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால், கொழுப்பை கரைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தூக்கமின்மை இருப்பின், வளர்சிதை மாற்றத்திற்கு, உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம்.