ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் நன்னாரி
தெற்காசிய நாடுகளில் வளரும், கொடி வகை தாவரம் நன்னாரி. அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள மூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி என பல பெயர்கள் உள்ளன.
நன்னாரியின் கெட்டியான வேர், நறுமணம் நிறைந்தது. இலைகள், நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும்.
வேரில் தயாரித்த சாறு, சிறந்த நீர் உணவாக பயன்படுகிறது. அதை, நன்னாரி சர்பத் என்பர்; வெயில் காலத்தில் இதம் ஏற்படுத்தும்; உடல் வியர்வை போக்கை ஒழுங்குபடுத்தும்.
சிறுநீரை சீர் செய்யும். ரத்தத்தை துாய்மையாக்கும்.
வயிற்றில் புண் உண்டாக்கும், 'ஹெலிகோபாக்டர் பைலோரி' என்ற பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
செரிமானப் பிரச்னையை தீர்க்கும். பித்தக் கோளாறுகளை சரி செய்யும்.
ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த நன்னாரி.