உடலும் உள்ளமும் நலமாகவே இருக்க என்ன செய்யலாம்?

உங்களுக்காகக் குறைந்தது 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்நேரத்தில் மிகவும் அமைதியாக இருங்கள்.

அலைபேசிக்கு ஓய்வு கொடுங்கள். இசையைக் கேளுங்கள். பிடித்த பாடலை மனதுக்குள் பாடுங்கள்.

மனதை ஈர்க்கும் விஷயங்களைப் படியுங்கள். மன இறுக்கம் அவிழும்.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சக மனிதர்கள் யாரையும் வெறுக்காதீர்கள்.

அனைவரிடமும் புன்னகைக்கப் பழகுவோம். பின்னர்ச் சிரிப்பினை சொந்தமாக்குவோம்.

மனம் விட்டு சிரிக்கும் போது முகத்தில் உள்ள அனைத்து தசைகளும் வலுப்பெறுகின்றன.

இவையனைத்தையும் கடைபிடித்தால் உடலும் உள்ளமும் நலமாகவே இருக்கும். நாமும் அழகாக மாறுவோம்.