சிறுவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்க என்ன காரணம்? எப்படி சரியாகும்?
மழைக்காலம், குளிர் காலத்தில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சளி பிடித்தால் பசியின்மை ஏற்படும்.
அதுவே நோய் வெளிப்பாடாக காய்ச்சல், இருமல் பாதிப்புகளும் வந்து விடும்.
அந்த மாதிரியான நேரங்களில் உணவு பழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
வெந்நீர் அருந்த வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் காரட், தக்காளி சூப் தரலாம்; பின் ஒரு இட்லி தரலாம்.
இஞ்சி, பூண்டு, மிளகு கலந்த சூப் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளித் தொந்தரவு நீங்கும்.
மழைக்காலத்தில் வைட்டமின் 'ஏ' உள்ள பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம்.
தேன் கலந்த மிளகு, மஞ்சள், பூண்டு பொடிகளை நாக்கில் வைத்து சுவைத்து சாப்பிட்டால் அவற்றின் சக்தி பன்மடங்கு நமக்கு அதிகமாக கிடைக்கும்.
3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி தொந்தரவு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.