சைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதம் கிடைக்க ஏற்ற உணவுகள்
அசைவ உணவுகளான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றில் புரதம் அதிகளவில் உள்ளது. சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள் புரதச் சத்தைப் பெற ஏற்ற உணவுகள் குறித்து பார்க்கலாம்.
சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள் அன்றாடம் சில புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக, புரதச் சத்துப் பற்றாக்குறையில் இருந்து தப்பிக்கலாம்.
தோஃபு பன்னீர், டிம்பா, எடமே உள்ளிட்டவை சோயா பீன்களில் இருந்து எடுக்கப்படுகின்றன. இவற்றில் ஏதாவதொன்றை தினமும் சாப்பிட்டால் ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தைப் பெறலாம்.
பச்சைப் பட்டாணியை உணவில் சேர்ப்பதால் புரதம் அதிகளவில் கிடைக்கும். இதனுடன் சோயா பால் சாப்பிட்டுவர தசைகள் வலுவாகும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் அதிகளவு புரதம் பெற ஓட்ஸை பாலில் கலந்து காலை, மாலை சாப்பிடலாம். இதனுடன் முளைகட்டிய பயிர், சிறுதானியங்கள், கோதுமைக்களி உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம்.
கோதுமையில் உள்ள குளூடெனில் அதிகளவில் புரதம் உள்ளது. உடல் மெலிந்தவர்கள் தங்கள் அன்றாட உணவில், அதிகளவில் புரதத்தை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உடற்தசைகள் வலுவடைய புரதம் நிறைந்த பருப்பு வகைகள், கீரை, காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.