ரத்த சோகையை உணவின் மூலம் சரி செய்ய முடியுமா?
ரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது.
அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல் ரத்த அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவைவிட குறைந்திருந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும்.
ரத்த சோகை இருப்பவர்களுக்கு உடல் அசதி ஏற்படும்; அதிக துாரம் நடக்க முடியாது.
சிலருக்கு படபடப்பு, கால் வீக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும்.
சி.பி.சி., ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோய் இருப்பதை கண்டறியலாம்.
இரும்புச்சத்து, பி12 , போலிக் ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் சரியாக வாய்ப்புள்ளது.