குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதை தவிர்க்க
காலநிலை மாற்றம் எப்போது ஏற்பட்டாலும் சளி பிடிப்பது இயல்புதான்.
பொதுவாக குளிர்காலத்தில் தாகம் எடுக்காததால் பலரும் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை.
ஆனால், நீர்ச்சத்து குறைவால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.
கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து அடிக்கடி குடிக்க வேண்டும்.
சிறிது கிராம்பு, சித்தரத்தை, ஏலக்காய், கற்பூரவள்ளி இலை, துளசி, துாதுவளை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய பின் குடிக்க, சளி பிடிக்காமல் தடுக்க உதவும்.
ஓரிரு நாட்களுக்கு மேல் சளி இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.