புற்றுநோயை தடுக்கும் பால்... ஆய்வில் தகவல்
உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். அதிலும் குடல் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது. இதிலிருந்து தப்பிக்க சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதில், தினமும் 300 மி.கி., கால்சியம் எடுப்பவர்களுக்கு குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 % குறையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில், குறிப்பிட்ட நபர்கள் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில், கணிசமான பிரிவினருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது.
இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? பிறருக்கு ஏன் வரவில்லை என ஆராய்ந்ததில், தினமும் குறிப்பிட்டளவு கால்சியம் எடுப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைந்திருந்தது.
தினமும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் சுண்ணாம்புச் சத்து கிடைத்துவிடும்.
பால் பிடிக்காதவர்கள் டோஃபு, பிரக்கோலி போன்றவற்றின் வாயிலாக கால்சியத்தைப் பெறலாம்.
அதேவேளையில், தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பை 29 % அதிகரிக்கிறது.
தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 % அதிகரிக்கிறது.
எனவே, மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.