இன்று உலக சிறுநீரக தினம்!

சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கிட்னி தினம் மார்ச் இரண்டாம் வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் இன்று (மார்ச் 13) அனுசரிக்கபடுகிறது.

உடல் உறுப்புகளில் மூளை, இருதயம் போன்று சிறுநீரகமும் மிகவும் முக்கியமானது. உடலில் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.

மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உணவுப்பழக்கம், காசநோய் உள்பட பல காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான சிறுநீரகதிற்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உப்பு நிறைந்த உணவுகளை குறைத்தல், நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்தல் மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான சீறுநிரகதிற்கு தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியம். புகை, மது பழக்கத்தை கைவிட வேண்டும்.

மேலும் குறைந்தது 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது.