தாய்ப்பாலுடன்... குழந்தையின் மனது நிறையும் நேரம்!
தாய்ப்பால் தரும் போது, குழந்தைக்கும், தாய்க்கும் இயல்பாக ஏற்படும் பிணைப்பால் மன அழுத்தம் குறைந்து, இருவருக்குமே ஆழ்ந்த துாக்கம் வரும்.
அதனால், சில நேரங்களில் படுத்தபடியே தாய்ப்பால் தரும்போது, மார்பகம் அழுத்தி குழந்தைக்கு மூச்சு திணறலாம்.
அளவுக்கு அதிகமாக பால் சுரந்து, குழந்தையால் விழுங்க முடியாமல் புரை ஏறலாம்.
பொதுவாக குழந்தை பால் குடித்து முடித்த பின், முதுகில் தட்டும் பழக்கம் இருக்கிறது. அப்படி செய்யாமல், குழந்தை சிறிதளவு பால் குடித்ததும், மார்பில் போட்டு முதுகில் தட்ட வேண்டும்.
அதன்பின் மீண்டும் பால் தர வேண்டும். இப்படி சிறிது பால் குடித்ததும் முதுகில் தட்டிக் கொடுப்பது, மீண்டும் பால் தருவது என்று மாறி மாறி செய்வது முக்கியம்.
மூன்று மாதங்கள் வரை உட்கார்ந்து கொடுப்பது தான் குழந்தைக்கு பாதுகாப்பு.
குறை பிரசவ குழந்தையாக இருந்தால், டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மகப்பேறு டாக்டரிடம் ஆலோசனை பெற்று, சரியான நிலையில் தான் தருகிறோம் என்பதை உறுதி செய்த பின், 'டிஸ்சார்ஜ்' ஆவது இன்றைய சூழலில் பாதுகாப்பானது.