குழந்தைகளின் தன்னம்பிக்கை உடையாமலிருக்க தவிர்க்க வேண்டியவை
குழந்தைகள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்கும் இடைவிடாமல் விமர்சிக்கும்போது, அவர்கள் தவறை உணரமாட்டர்; பயம் கொள்வர்.
உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுடன் குழந்தைகளை ஒப்பிடும்போது, தாழ்வு மனப்பான்மை, மனக்கசப்பு உருவாகலாம்.
குழந்தைகளின் மீது காட்டும் அதிகப்படியான பாதுகாப்பும் கூட, அவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் திறனை குறைக்கக்கூடும்.
சிறிதோ, பெரிதோ அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவோ, கொண்டாடவோ தவறினால் சாதிக்கும் ஆர்வம் குறையக்கூடும்.
எட்ட முடியாத இலக்குகளை அடைய குழந்தைகளை விடாப்பிடியாக தள்ளுவது, விரக்தி, பதட்டத்துக்கு வழிவகுக்கும்.
விளையாட்டுக்காக கிண்டல் கேலியாக பேசுவது, குழந்தைகளின் சுயமரியாதையை பாதிப்பதுடன், பாதுகாப்பற்ற உணர்வை தரும்.
கடினமான நேரத்தில் அவர்களின் உணர்வுகளை நிராகரிப்பதோ அல்லது ஆறுதல் தர தவறுவதோ, பெற்றோரிடமுள்ள பற்றை குறைக்கக்கூடும்.
குழந்தைகளின் வயது அதிகரிக்கும்போது, தன்னிச்சையான, நியாயமான முடிவுகளுக்கு அனுமதி மறுப்பது, அவர்களின் சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் தடுக்கக்கூடும்.