பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை..!
சரும வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்பிற்காகவும் பாடி லோஷனை பலரும் பயன்படுத்துகின்றனர்.
சிலருக்கு சாதாரணமாகவே சரும வறட்சி இருப்பதால், வெயில் காரணமாக நீரேற்றம் குறைவதால் உடல் முழுவதுமாகவே வறட்சியாகக் காணப்படும்.
எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷனை பயன்படுத்தலாம்.
குளித்தவுடன் உடல் முழுதும் பாடி லோஷனை தடவலாம். உடலில் ஈரப்பதம் இருக்கும்போது தடவினால், ஈரப்பதம் நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கப்படும்.
முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட பாடி லோஷன்களை பயன்படுத்துவது சருமத்துக்கு பாதுகாப்பாக அமையும்.
முதலில் காலில் இருந்து துவங்கி உடல் முழுவதும் தடவினால் நல்லது. முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்யலாம். ஒவ்வொரு பாகத்திலும் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும்.
பாடி லோஷனை தேர்வு செய்யும் முன் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு தேர்வு செய்வது சிறந்தது.