தேங்காய் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
வைட்டமின்கள் சி, ஈ, பி1, பி3, பி5 மற்றும் பி6, இரும்பு, செலினியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் தேங்காய்பாலில் நிரம்பியுள்ளன.
இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அதிகளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது; மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மையளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைப்பதால், கீல்வாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுடன் தீர்வாக உள்ளது.
தேங்காய் பாலை அடிக்கடி உட்கொள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, இளமையான தோற்றத்தை அளிக்கிறது.
இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் கூந்தல் உதிர்வை குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம்.