நுரையீரல் சளி... பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
பொதுவாக சளி பாதிப்பு என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் கிருமி தொற்று ஏற்பட்டு, அலர்ஜி அல்லது ஒவ்வாமையால் ஏற்படலாம்.
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் சளிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி சளி ஏற்படலாம்.
நுரையீரலில் கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்குரிய உணவு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி சூப், கீரை சூப் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, கொத்தமல்லி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
துாங்கும் அறையில் தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி புகையினை சுவாசிப்பதை தவிர்க்கவும்.
மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதால் சளி பாதிப்பு குறையும்.
சித்த மருந்துகளில் தாளி சாதி சூரணம், முத்து சிற்பி பற்பம், ஆடாதொடை மணப்பாகு உட்பட பல மருந்துகள் உள்ளன. டாக்டரின் அறிவுரைப்படி எடுக்கலாம்.