குளிர்காலத்தில் பரவும் மம்ப்ஸ் : பெற்றோர்கள் உஷார்!

குளிர்காலத்தில் பரவக்கூடிய, 'மம்ப்ஸ்' என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ், குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது.

இப்பருவத்தில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் சின்னம்மை, தட்டம்மை, சின்னமுத்து, அக்கி, மம்ப்ஸ் போன்ற அம்மை நோய் பரப்பும் வைரஸ்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

அதிலும் மம்ப்ஸ்' என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ், குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது.

கன்னத்தில் வீக்கமில்லாமல் அதீத காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகள்

அம்மை நோய் ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெறுவது அவசியம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

வீக்கம் ஏற்பட்ட இடத்தில் குளிர் அல்லது சுடு ஒத்தடம் வழங்கலாம். கஞ்சி, மோர், பழச்சாறு, கூழ் போன்றவை சாப்பிடலாம். அதிகளவு நீர் பருக வேண்டும்.

இந்நோய், ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாகக்கூடியது. பாதிக்கப்பட்டவரை குறைந்தது, ஒரு வாரம் தனிமைப்படுத்துவது நல்லது.

இருமல், தும்மல், சளி போன்றவற்றின் வாயிலாக, பரவும் என்பதால், பொது இடங்கள், பள்ளிகள் போன்றவற்றில், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்