காற்றின் மூலம் பரவும் தொற்று கிருமி டி.பி.. எங்கு எல்லாம் தாக்கும்?
நுரையீரலை மட்டும் தான் டி.பி., பாதிக்கும் என்பதில்லை. எந்த இடத்தில் டி.பி., பாதிக்கிறதோ அதற்கேற்பவே அறிகுறிகள் இருக்கும்.
அக்குள், கழுத்தில் நெறி கட்டுவது, சிலருக்கு நுரையீரல், மண்ணீரலின் பக்கத்தில், வயிற்றின் உள்ளேயும் நெறி கட்டும். குடல், மூளை, முதுகெலும்பு, கண்கள் என்று எந்த உறுப்பிலும் டி.பி., வரலாம்.
நுரையீரலில் வந்தால் இருமல், சளி; மூளையை பாதித்தால் தலைவலி; கழுத்தில் நெறி கட்டினால் வீக்கம், வலி இருக்கும். வயிற்றில் இருந்தால் உடல் எடை குறையும்; செரிமானம் ஆகாது.
கொரோனா தொற்றுக்கு பின் டி.பி., பாதிப்பு அதிகம் உள்ளது. காரணம், சளி, இருமல் என்றவுடன் சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்வதால் பாதிப்பு வெளியில் தெரிகிறது.
தற்போது சளி, இருமல் தொடர்பான உடல் பிரச்னையானாலும் 15 நாட்களுக்குள் சரியாகாமல், அதிகமாகி கொண்டிருந்தால் டி..பி.,யாக இருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படோர் டாக்டர் நேரடியாக பார்த்த பின், அதை உறுதிசெய்வதற்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். பின் அதற்காக முறையான, முழுவையான சிகிச்சை பெற வேண்டும்.