அழுகல் முட்டையா?... கண்டுபிடிக்க டிப்ஸ்!!
வைட்டமின், மினரல்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ள முட்டை இருந்தாலேயே போதும் ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவு வகைகளை உடனே தயார் செய்ய முடியும்.
ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி, பிரைடு ரைஸ், கிரேவி என முட்டையை கொண்டு பல ரகங்களில் உடனடியாக உணவு செய்து அனைவரையும் அசத்தலாம்.
சில நேரங்களில் கல்லில் முட்டையை போடும் போது அது கெட்டுபோனது என தெரியவரும். எனவே அழுகிய முட்டையை எப்படி கண்டறிவது குறித்து சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்..
நல்ல முட்டைகள் எப்போதும் தண்ணீரில் மிதக்காது. அதனால் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மெதுவாக விடுங்கள். முட்டை மிதந்தால் கெட்டுப்போனதாகும்.
அழுகிய முட்டைகளை அவற்றின் வாசனையால் கண்டறியலாம். அப்படி அழுகியவற்றில் கந்தக வாசனை வீசினால் அது கெட்டுப்போனது.
முட்டையை கையில் குலுக்கும் போது சத்தம் வந்தால் அதை கெட்டுப்போனது. காரணம். நல்ல முட்டையின் வெள்ளை, மஞ்சள் கரு உட்புற ஓட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால் சத்தம் வராது.
முட்டையை உடைக்கும் போது அதன் கருவில் சிவப்பு நிற புள்ளிகளை கண்டால் பெரும்பாலும் அந்த முட்டை கெட்டுப்போனதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை தவிர்க்கலாம்.