குறைந்த கலோரிகள் உள்ள காலை உணவுகள் சில...!

தற்போது உடல் பருமன் என்பது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் 'ஒபிசிட்டி'யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த கலோரிகள் உள்ள உணவை சாப்பிடும் போது ஆரோக்கியத்துடன் உடல் எடையையும் குறைக்க முடியும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாக உள்ளது.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் காளான் ஆகியவற்றை சேர்த்து செய்த ஆம்லெட்டை காலை உணவாக எடுக்கலாம்.

முதல் நாள் இரவு ஊறவைத்த பச்சைப் பயறுடன், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடலாம்.

உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்புபவர்கள் சிறுதானியங்களில் ஒன்றான கம்பை, கம்பங்கூழ், புட்டு, ரொட்டி, கம்பு தோசை என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்க்கலாம்.

ஓட்ஸில் குறைவான கலோரிகள், அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு காலை உணவுக்கு ஏற்றது ஓட்ஸ் இட்லி.

இட்லியாக இல்லாவிட்டால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸை ஸ்மூத்தியாக செய்து 'ஹெல்த்தி டிரிங்க்' ஆக குடிக்கலாம்.