குழந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்கும் குரோத் ஹார்மோன்
குழந்தைகளின் மூளை, உள் உறுப்புகள், உயரம், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு காரணமான 'குரோத் ஹார்மோன்' துாக்கத்தில் மட்டும் தான் சுரக்கும்.
போதியளவு துாக்கம் இல்லாவிட்டால் தேவையான அளவு குரோத் ஹார்மோன் சுரக்காது.
இதனால், வளர்ச்சி குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, கவனக் குறைவு ஏற்படும்.
காரணமே இல்லாமல் அழுவர்; எரிச்சல் அடைவர்; படிப்பில் கவனம் இருக்காது; வகுப்பறையில் துாங்கி வழிவர்.
இந்நிலை தொடர்ந்தால், நாள்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், உடல் பருமன், டைப் 2 சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என்று வாழ்க்கை முறை மாற்ற நோய்கள் வரக்கூடும்.
அமெரிக்காவில் 12, 13 வயதிலேயே இப்பிரச்னைகளுடன் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீட்சா, பர்கர் என அவர்களின் உணவு முறைகளுக்கு பழகிவிட்ட நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே இப்பிரச்னைகள் வரும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.