கவுட் எனப்படும் முடக்கு வாதம் எங்கு ஏற்படும்? என்ன தீர்வு?

கவுட் எனப்படும் முடக்கு வாதம் உடலில் உள்ள சின்னச் சின்ன எலும்பு மூட்டுகளில் ஏற்படும் ஓர் அலர்ஜியாகும். குறிப்பாக பனி காலத்தில் இவை யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் ஏற்படும்.

இவை பொதுவாக கால் பெருவிரல் எலும்பு மூட்டில் வரும். சிலருக்கு, கை விரல், மணிக்கட்டு, முழங்கை மூட்டுகளிலும் இது வர வாய்ப்புண்டு.

இவை உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் சுரந்து அவை மூட்டுகளில் சென்று தங்கி வலியை ஏற்படுத்துகிறது.

கவுட் பிரச்னை ஏற்படும் போது சாதாரண மூட்டுவலிகளை போன்று இல்லாமல், கால் பெருவிரலுக்கு அருகில் உள்ள மூட்டில் கடுமையான வலியை உண்டாக்கும்.

இதற்கு முக்கியமான தீர்வு ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது தான். மேலும் கவுட்டில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிவகுக்கும்.

மேலும் இவற்றை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நீர் காய்கறிகள் அதிகளவு எடுத்து கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சியும் அவசியமாகும்.

உணவில் சிறு தானியம், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்காது.

அதேபோல் கோழி, ஆட்டு கறி போன்ற சிகப்பு இறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவுகளை அதிகம் எடுக்க வேண்டாம். மதுவை தவிர்ப்பது மிகவும் நல்லது.

குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம், சுவீட்ஸ், கேக், பிரெட் போன்ற அதிக இனிப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்.