அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. இன்று காதலர் தினம் ...

காதலர் தின வரலாற்றை பார்ப்போமா... 3ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார்.

இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

அவரது நினைவு நாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.

அன்பு, காதல், பாசம் என மனித குலத்தில் மகத்தான குணங்களை முன்வைத்து இது கொண்டாடப்படுகிறது. இந்நாள் தான் காதலர்களுக்கு பொன்னாள்.

'வேலன்டைன்ஸ் டே!' காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுத்து அசத்துவர்.

காதலர்கள் மட்டுமின்றி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள ஏற்ற நாளாக இருப்பதால், இந் நாளுக்கு 'அன்பர்கள் தினம்' எனவும் பெயர் உள்ளது.