பூண்டை இப்படி சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியம் நிச்சயம்!!
உணவில் அடிக்கடி வெள்ளைப்பூண்டை சேர்த்தால், ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும், பூண்டிற்கு புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றலும் உண்டு.
நம்முடைய தினசரி உணவில் பூண்டுக்கு தனி இடம் உண்டு. மிளகு, சீரகத்துடன் பூண்டு சேர்த்தால் தான் ரசம், 'கமகம'ன்னு மணம் வீசி ருசிக்கும்.
இது, வாதம், பித்தம் மற்றும் சிலேட்டுமம் எனச் சொல்லப்படும் கபத்தை நீக்கி, உடல் நலம் பெற உதவுகிறது.
வாயுக்கோளாறுக்கு முழு வெள்ளைப் பூண்டை தீயில் சுட்டு, நன்கு வெந்ததும் சாப்பிட்டால், வந்த இடம் தெரியாமல் விலகிப் போகும்.
ரத்தக்கொதிப்பு உள்ளோர், இரண்டு பூண்டை உரித்து, ஒரு டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது, ஒரு டம்ளராக வற்றியதும், இரவு தூங்கச் செல்லும் முன் சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு குணமாவதுடன், வயிற்றுக்கோளாறு, நெஞ்சுவலி சரியாகும்.
மேலும், காதுவலிக்கு பூண்டு நல்ல மருந்து; நல்லெண்ணெயில், 10 கிராம் பூண்டுப்பல்லை போட்டு காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டி வைத்து, அதை காதில் இரண்டு சொட்டு விட்டால், வலி குணமாகும்.