மா இஞ்சியின் மருத்துவ மகிமையை அறிவோமா!!

பச்சை மாங்காயின் நறுமணம் வருவதாலேயே இதற்கு மா இஞ்சி (மாங்காய் இஞ்சி) என்ற பெயர் உண்டானது. நாவில் இட்டால் இது மிகவும் சுவையாக இருக்கும்.

சாதாரண இஞ்சியில் நார்கள் அதிகமாக இருக்கும். ஆனால், மா இஞ்சியில் நார் பாகம் மிகவும் குறைவு. மேலும் இந்த மா இஞ்சியில் காரம் இருப்பதில்லை.

உணவுப் பண்டங்களுக்கு மாங்காய் வாசனை ஏற்படுத்துவதற்காகவே இது பெரிதும் பயனாகிறது. பிரதானமாக இது ஊறுகாய் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

சித்தா, ஆயுர்வேதா ஆகிய பழமையான மருத்துவ முறைகளிலே இதனை பயன்படுத்தியுள்ளார்கள். காரணம் இதன் மருத்துவ பயன்கள் ஏராளம். அவற்றை குறித்து பார்ப்போம்.

இருமலைக் கட்டுப்படுத்தும். மேலும் ஆஸ்துமா, ஜுரம், தோல் வியாதிகள் ஆகியவற்றை அகற்றவும், மலத்தை இளக்கவும் மா இஞ்சி பெரிதும் பயனாகிறது.

திப்பிலியுடன் சேர்ந்து மா இஞ்சி எடுத்துக்கொண்டால், மூலநோயைக் குணப்படுத்தவும், மேலும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் உபயோகமாகிறது.

அதீத உடற்சூட்டை மட்டுப்படுத்துவது, குடற்புழுக்களை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது.

ரத்தக் கொழுப்பைக் குறைப்பது, சிறுநீர் பிரச்னைகளை சீராக்குவது போன்றவற்றுக்கும் மா இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.