காது நலன் காக்க சில டிப்ஸ்...

அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கண்டகண்ட பொருட்களால் காதைக் குடையக்கூடாது.

குளிர் பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மூக்கைப் பலமாகச் சிந்தக்கூடாது.

காதுக்குள் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றக்கூடாது.

சைனஸ், டான்சில் போன்ற வற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தால் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.

சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அலைபேசியில் பேசும் நிலை ஏற்பட்டால் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.

மதுவும் புகைபிடிப்பதும் காதின் நலனை பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடை கொடுப்பது நல்லது.