குழந்தைகளுக்கு அதிக ஊட்டம் தரும் நேந்திரம் பழம்!
நேந்திரம் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் என பல ஊட்டச்சத்துக்களை உள்ளன.
குழந்தைகளுக்கு, நன்றாகப் பழுத்த நேந்திரம் பழத்தை, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். அவை அவர்களுக்கு சிறந்த தசை இயக்கத்தை அளிக்கும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, அந்நோய் விலகி உடல் பலம் பெறும்.
இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. மேலும் உடல் எடையை குறைக்க செய்யும்.
ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடலில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கு உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகின்றன.