தினசரி ஏன் படிகளில் ஏற வேண்டும்?

15 நிமிடங்கள் நடப்பது அல்லது 'ஜாகிங்' செய்வதால் என்ன பலன் கிடைக்குமோ, அதை விட இரண்டு மடங்கு பலன், படி ஏறுவதால் கிடைக்கும்.

தொடர்ந்து 6 நிமிடம் படி ஏறினால், உடலிலுள்ள மொத்த கொழுப்பில் 15 சதவீதம் குறைகிறது.

உடல் வலிமை 10 - 15 சதவீதம், எட்டு வாரங்களில் அதிகரிக்கக்கூடும்.

15 மீட்டர் துாரத்துக்கு உள்ள படிக்கட்டுகளை தினமும் ஐந்து முறை ஏறினால், 302 கலோரிகள் வீணாகும்.

படி ஏறும் போது, பாதம் முழுதும் நன்றாக படிகளில் படும்படி நிதானமாக ஏற வேண்டும்.

அப்படி செய்தால் முதுகு, கணுக்காலில் அதிக பாதிப்பு ஏற்படாது என ஆய்வுகள் கூறுகின்றன.