வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

தினமும் உணவில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான வெந்தயம் ருசியை அளிப்பதுடன், இதன் மருத்துவ குணங்களால் நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

இதில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, சோடியம், பொட்டாசியம், தயமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் - ஏ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிக்க, அஜீரண கோளாறில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாரமொருமுறை மோரில், வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால், வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும். உடல் சூட்டை கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை தூண்ட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.