தோல் நோய்களை தீர்க்கும் புங்கன் தைலம்!
புங்கன் மரத்தின் இலை, பூ, காய், வேர், பருப்பு, அதனுள் இருக்கும் எண்ணெய் யாவும் மருத்துவ பயன் உடையவை.
தோல் நோய்களை தீர்க்கும் முக்கிய மருந்துகளில் ஒன்றாக சித்த மருத்துவத்தில் புங்கன் தைலம் உள்ளது.
அரிப்பு, தடிப்பு, ரணம் என தொடர்ந்து தொந்தரவு தரும் தோல் நோய்கள் அனைத்தும் பூரண குணமாகும்.
கரப்பான், கிருமித் தொற்று, சர்க்கரை நோய், மேக நோய் போன்றவற்றால் தோலில் ஏற்படும் நாள்பட்ட நமைச்சல், புண், புரைகள், ரணங்களை ஆற்றும் சக்தியுடையது.
பாதிக்கப்பட்ட இடத்தில் மூன்று மாதங்கள் வரை தடவினால் குணம் தெரியும். இத்துடன் புங்கைப் பூ சூரணத்தையும் உள் மருந்தாக சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தோல் நோய்களுக்கு மட்டுமல்லாமல், சர்க்கரை கோளாறுக்கும் சிறந்த துணை மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.