ஆரோக்கியமான ரத்தத்தை பராமரிக்க உதவும் உணவுகள்
நாம் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்க,ஆரோக்கியமான ரத்தத்தை பராமரிப்பது அவசியம். அதற்கு நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது.
ப்ரக்கோலியில் ரத்தம் உற்பத்தியாக
தேவையான அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து
உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியமான ரத்தம் உற்பத்தியாகி உடலை வலுவாக
வைத்துக் கொள்ள உதவும்.
ஆரஞ்சு , உலர் திராட்சை மற்றும் தேன் ரத்தத்திற்குத் தேவையான
இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்தை வழங்குகிறது. இவற்றைத் தினந்தோறும்
சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஆரோக்கியமாகும்.
கோதுமை புல் சாறு மற்றும் சிவப்பு காராமணியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
நெல்லிக்காய் மற்றும் சீந்தில் போன்ற மூலிகைகள் ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.