பசிக்காமல் சாப்பிட்டால் உணவு உடலில் தேங்கும் கழிவாகுமா?
உடல் கேட்கிற போது உணவு கொடுக்க வேண்டுமா அல்லது நாம் நினைக்கும் போதெல்லாம் கொடுக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.
பொதுவாக நம் உடல், உணவை கேட்கிறதா அல்லது வேறு வேலையில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை அறியாமல், நாம் சாப்பிடும் உணவுகள் நிச்சயமாக சக்தியைத் தராது.
பசி அல்லது தேவை இல்லாமல் உண்ணும் போது உடலின் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் பெருக வழி செய்யும்.
பசியை உணர்ந்து உடல் கேட்கிற போது உணவு கொடுப்பதுதான், நம் உடலை துாய்மையாக வைத்துக் கொள்வதன் அடிப்படை.
உண்ணும் போதே வேறு பல வேலைகளையும் (டி.வி.பார்ப்பது) நாம் செய்தால் முழு கவனமும் உண்ணுவதில் இருக்காது. சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது.
பசிக்கிற போது அளவோடு, வேறு வேலைகள் ஏதும் செய்யாமல் விருப்பத்தோடு சாப்பிட வேண்டும்.
உடல் தனக்கு தேவையான விஷயங்களை நமக்குப் புரியும்படி அறிவிக்கும். அதன்படி நாம் உண்ணும் போது அது ஆற்றலாக மாறும் இல்லை என்றால் கொழுப்பாக தேங்கும்.