தினமும் டீ, காபி அருந்துவது சரியா?
டீ மற்றும் காபி இரண்டிலும் காஃபின் உள்ளது. ஆனால் காபியில் பொதுவாக தேநீரை விட காஃபின் அதிகமாக உள்ளது.
நீங்கள் காஃபினை அதிகம் விரும்பாதவர் என்றால், தேநீர் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
சராசரியாக ஒரு கப் டீயில் 20-60 மில்லிகிராம் காஃபின் உள்ளது. அதே சமயம்
ஒரு கப் காபியில் அது தயாரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து அதிகமாகும்.
தேநீர் மற்றும் காபி இரண்டும் உடலில் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவ கூடியவை. இது சருமத்தில் ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம் முதல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பது வரை, தேநீர் மற்றும் காபி இரண்டும் பல நன்மைகளுடன் தொடர்புடையவை.
தினமும் காபி குடிப்பதனால், அதிகரிக்கும் காஃபின் அளவை குறைக்க நீங்கள் விரும்பினால், தேநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
காபி மற்றும் தேநீர் சுவைக்காக பலரும் அடிமையாக கூடலாம். அந்த போதைக்கு நம்மை அனுமதிக்கும் முன் நாம் கவனமாக இருத்தல் நல்லது.