ரத்த சோகையை போக்கும் சீதாப்பழம்!
சீதாப்பழத்தில் இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின், 'ஏ, சி' மற்றும் புரதம், தாது உப்புகள், நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன.
ரத்த விருத்திக்கும், ரத்த சோகைக்கும் நல்ல மருந்து. இதய நோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதா பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். பற்களை வலுப்படுத்தும்.
இதில் உள்ள தாமிர சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு சீதாப் பழம் சாப்பிட்டு வர, அமிலத் தன்மையை சரி செய்யும். வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும்.
மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாத நோய், மூட்டு வலி, கீல் வாத நோய்களை போக்கும்.
சீதாப் பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும், நல்ல நிலையில் இருக்கும்.
சீதாப் பழத்தை சாப்பிட்ட பின், தோல் மற்றும் விதைகளை அரைத்து, பாசிப் பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும்; முடி மிருதுவாகும்.